Kalki 2898 AD Bujji Video Out Now: பிரபாஸின் கல்கி ஏடி 2898 படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ; மிரளவைக்கும் காட்சிகள்.!

ரூ.600 கோடி பொருட்செலவில் தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான கல்கி, ஜூன் மாதம் வெளியாகுவதை முன்னிட்டு படக்குழு முழு அளவிலான ப்ரமோஷன் பணியில் இறங்கியுள்ளது.

Kalki 2898 AD Bujji Video Out Now: பிரபாஸின் கல்கி ஏடி 2898 படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ; மிரளவைக்கும் காட்சிகள்.!
Kalki 2898 AD | Introducing Bujji (Photo Credit: YouTube)

மே 23, சென்னை (Cinema News): எவடே சுப்ரமணியம், மகாநதி, பிட்ட காதலு, ஜதி ரத்னலு ஆகிய படத்தை இயக்கி வழங்கிய நாக் அஸ்வின், தற்போது கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) என்ற படத்தை இயக்கி வழங்கவுள்ளார். வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவில், கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங்கில் இப்படம் உருவாகி இருக்கிறது. Google Doodle: அக்கார்டியன் இசைக்கருவிக்கு அங்கீகாரம் கிடைத்த நாள் இன்று; சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.! 

பல மொழிகளில் வெளியாகும் கல்கி திரைப்படம்: வரும் ஜூன் 27ம் தேதி திரையில் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளிலும் ஐமேக்ஸ் தரத்தில் இப்படம் வெளியாகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே வெளியாக வேண்டிய கல்கி திரைப்படம் கொரோனா மற்றும் 2024 மக்களவை தேர்தல் காரணமாக அடுத்தடுத்து தள்ளிப்போனது. தற்போது ஜூன் 27 அன்று உலகளவில் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புஜ்ஜி கதாபாத்திரம் அறிமுக வீடியோ: கல்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி, கீர்த்தி சுரேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி கதாபாத்திரத்தின் வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான 11 மணிநேரத்தில் 2,707,019 பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on May 23, 2024 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).