Google Doodle for Accordion (Photo Credit: Doodle.Google)

மே 23, புதுடெல்லி (New Delhi): இயல், இசை, நாடகம் என்ற விஷயத்தை போதித்த தமிழ் கலாச்சாரத்தில் எண்ணற்ற இசைக்கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்றளவில் பழைய இசைக்கருவிகளின் பயன்பாடு என்பது பெருமளவு குறைந்து காலத்தின் மாற்றத்திற்கேற்ப சில இசைக்கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் எஞ்சி இருக்கின்றன. ஆனால், ஜேர்மனிய இசைக்கருவி ஒன்று உலகளாவிய கவனம் பெற்றது உங்களுக்கு தெரியுமா?. அதுபற்றி இன்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

அக்கரடியான் இசைக்கருவி: கடந்த 1829ம் ஆண்டு மே 23 அன்று, துருத்தி என்ற பெயர்கொண்ட அக்கார்டியன் (Accordion) கருவிக்கு காப்புரிமை வழங்கப்பட்டது. துருத்தி என்பது ஜெர்மன் வார்த்தையான அக்கார்ட் (நாண்) என்பதில் இருந்து வழங்கப்பட்டது ஆகும். 1800ம் ஆண்டின் பிற்பகுதியில், ஜெர்மனியில் இருந்து ஐரோப்பா முழுவதும் நாட்டுப்புற கலைஞர்கள் இடையே துருத்தி உற்பத்தி & பயன்பாடு அதிகரிக்கப்பட்டது. தொடக்ககாலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இசைக்கருவி துருத்தி அருகருகே பொத்தான்களை கொண்டு இருந்தது. Forest Department Permission to Visit Doddabetta: ஊட்டி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு உற்சாக செய்தி; தொட்டபெட்டா செல்ல அனுமதி.! 

உலகளவில் அறிமுகமான பியானோ: இந்த பொத்தான்கள் நாண் ஒலியை ஏற்படுத்தியது. பின் உலகெங்கும் குடிகொண்ட ஐரோப்பியர்கள் துருத்தியில் பயன்பாட்டை விரிவுபடுத்தினார். இன்றளவில் அவை தொழில்நுட்பத்துடன் மெருகூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவிலான பியானோ போலவும் இது செயல்படுகிறது. இக்கருவிகளில் நாட்டுப்புற இசைகளை கேட்டு மகிழ்ந்து வந்த மக்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து அதனை செயல்படுத்துவார்கள். இந்த இசைக்கருவிக்கான அங்கீகாரத்தை உலகளவில் எடுத்துரைத்து சிறப்பிக்கும்பொருட்டு, கூகுள் இன்று தனது சிறப்பு டூடுலை (Google Doogle) வெளியிட்டு இருக்கிறது.

கூகுள் டூடுல்:

உங்களுக்காக சில இசைகள் கேட்டு மகிழ:

ஆங்கில திரைப்படங்களில் நீங்கள் கேட்டு மகிழ்ந்த இசைக்கான காரணம் இதுதான்: