Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: "கெட்டிமேளம் டும்..டும்.." நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்.!

Naga Chaitanya was seen with his wife-to-be Sobhita Dhulipala in a new set of photos.

Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding:
Sobhita Dhulipala & Naga Chaitanya (Photo Credit: Instagram)

நவம்பர் 29, ஹைதராபாத் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா (Samantha). திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பின், தம்பதிகள் தங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் புரிவதாகவும் அறிவித்தனர்.

சைதன்யா - சோபிதா தம்பதி திருமணம்:

இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யா, 3 ஆண்டுகள் திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும், பிரபல நடிகையும் சோபிதா துளிபலாவும் (Sobhita Dhulipala) திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் திருமண நிச்சயம் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் டிசம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. Vidamuyarchi Teaser: "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு" கடவுளே அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டீசர்!

இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது ஹல்தி நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளதை தொடர்ந்து இது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் சோபிதா, சைதன்யாவுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி புதுமண தம்பதிகளின் வாழ்க்கை மங்களகரமாக அமைய வாழ்த்தியுள்ளனர். ஹல்தி நிகழ்ச்சிக்கு பின்னர் சோபிதா நலங்கு நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக காணப்பட்டார். சைதன்யா சோபிதா திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திரைப்பட மற்றும் அரசியல் பிரமுகர்கள் என மொத்தம் 300 பேர் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

நாக சைதன்யா - சோபிதாவின் ஹல்தி போட்டோஸ்:

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).