Vidamuyarchi (Photo Credit: YouTube)

நவம்பர் 29, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Nagarjuna Sons' Wedding: இரு மகன்களுக்கும் ஒரே நாளில் திருமணமா..? நடிகர் நாகார்ஜுனா விளக்கம்..!

விடாமுயற்சி டீசர்: இந்நிலையில் விடாமுயற்சி பட அப்டேட்டை பார்த்து காத்திருந்தவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், அப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. “கடவுளே அஜித்தே” என்ற வார்த்தையை போலவே, பின்னணி இசை அமைத்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ’விடாமுயற்சி’ பிரபல ஹாலிவுட் படமான ’பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என்ற விஷயம் வெளியாகியிருக்கிறது. விடாமுயற்சி படமானது வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் வெளியானால் அஜித் ரசிகர்களுக்கு டபுல் பொங்கல் டீரீட்டாக அமையும்.

விடாமுயற்சி டீசர்: