Femi 9 Success Meet: பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா... விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி...

சேலம் மாவட்டம் சங்ககிரி உள்ள ஒரு இடத்தில் பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

Femi 9 Success Meet: பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா... விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி...
Femi 9 Success Meet (Photo Credit: @VigneshShivN X)

ஜனவரி 11, சேலம் (Salem): நடிகை நயன் தாரா (Nayanthara) டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெமி 9 (Femi 9) என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி உள்ள ஒரு இடத்தில் பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்க ஜரிகையைக் கொண்டு வரையப்பட்ட அழகிய ஓவியத்தை பரிசாக வழங்கினர். அதில் உயிர் ருத்ரோனில் N. சிவன், உலக் தெய்வேக் N சிவன் குழந்தைகளுடன் நயன் மற்றும் விக்கி இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 4-year Integrated B.Ed: 2 ஆண்டு பி.எட் படிப்புகளுக்கு அனுமதி கிடையாது... தேசிய ஆசிரியர் கவுன்சில் அதிரடி தகவல்..!

விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி: மேலும் நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும், நிச்சயம் ஒரு ஆண் இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதாவது, "வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டுமென்று தான் என் கணவர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை கூட நீ ஏன் இதை செய்கிறாய்? என கேட்டது இல்லை. விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்து வருகிறார். என்னுடைய பெரிய பலமே அவர் தான்" என தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jan 11, 2024 07:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).