This Week OTT Rls - Feb 15: இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்.. அசோக் செல்வன் ரசிகர்களுக்கு விருந்து..!
இந்த வாரம் ஓடிடி ரிலீசாக வெளியாகும் படங்களின் லிஸ்ட் குறித்த தகவல்களை தற்போது இங்கு பார்க்கலாம்.
பிப்ரவரி 15, சென்னை (Chennai): தமிழ் சினிமாவில் வாரந்தோறும் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. அப்போது நாம் மிஸ் செய்த படங்களை ஒரு மாதத்திலேயே நம்மால் ஓடிடியில் பார்க்க முடியும். அதன்படி இந்த வாரம் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அவைகளைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
சபாநாயகன்: தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் அசோக் செல்வன். இவர் நடிப்பில் டிசம்பர் 15ஆம் தேதி வெளியான படம் தான் சபாநாயகன் (Saba Nayagan). இப்படத்தை கார்த்திக் இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்தில் நேகா ஆகாஷ் நடித்து இருந்தார். தற்போது இந்த திரைப்படம் ஆனது இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. Director Prakash Koleri Death: மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
ரூட் நம்பர் 17: ஜித்தன் ரமேஷ் மற்றும் அஞ்சு பாண்டியா நடித்த திரைப்படம் தான் ரூட் நம்பர் 17 (Route No. 17). இப்படத்தை அப்துல்லா ஜி தேவன் இயக்கியிருந்தார். இப்படத்தினை பூமிக்கு அடியில் குகை அமைத்து எடுத்ததாக கூறினர். அதாவது கேரளாவில் உள்ள மண் குவாரியில் பூமிக்கு அடியில் புகை செட் அமைத்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். இப்படம் ஆனது தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் இன்று வெளியாக உள்ளது.
(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

