Thangalaan Update: விக்ரமின் பிறந்தநாளையொட்டி தங்கலான் மேக்கிங் வீடியோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

சியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.

Thangalaan (Photo Credit: @chiyaan X)

ஏப்ரல் 17, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பல்வேறு கெட்டப்களில் ஒருவர் நடித்துள்ளார் என்றார் அது கண்டிப்பாக சியான் விக்ரம் (Chiyaan Vikram) தான். இதன் காரணமாகவே இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக இவருக்கு வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன் 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்திருந்ததினால், அவரின் தனி வெற்றியாக பார்க்கப்படவில்லை. Koyambedu Market Closed: மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை..!

தொடர்ந்து நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் அடி, உதை, ரத்தம் என அட்டகாசமாக நடித்து இருக்கிறார் விக்ரம். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement