ஏப்ரல் 16, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் தபால் வாக்கு பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்தது. TN Weather Report: தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 19 அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் காய்கறி மார்கெட் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இயங்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது.