French Actress Anouk Aimée Dies: பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி காலமானார்.
ஜூன் 21, லண்டன் (Cinema News): பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி (French actress Anouk Aimée) காலமானார். இவருக்கு வயது 92. இவர் தனது 14 வயதில் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1947 முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்.. முன்பே கணித்த உயர் அதிகாரி.. அரசியல் கட்சிகளின் தலையீடா?.!
1966 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன பிரெஞ்சு ரொமன்டிக் படமான, ‘ஏ மேன் அண்ட் எ வுமன்’ படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். லோலா, ஆண்ட்ரே மேன், ஜஸ்டின், இத்தாலிய படமான ஏ லீப் இன் த டார்க் என பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் காலமாகிவிட்டதாக அவர் மகள் மானுயெல்லா அறிவித்துள்ளார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

