Kallakurichi Methanal Liquor Case (Photo Credit: @ANI / @nabilajamal_X)

ஜூன் 21, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): தற்போது தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கள்ளச்சாராயம்தான். இதுவரை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 125 பேர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. இதுவரை காவல் துறையினர் நடத்திய சோதனையில் 1100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் பணியிடை நீக்கம்: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரூ.10 இலட்சம் இழப்பீடு: இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தோடு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Eclipse Mythology: நிகழாக் கதைகளும் நிகழும் கிரகணமும்.. பல நாடுகளில் உலாவும் மூடநம்பிக்கை..!

முன்பே கணித்த உயர் அதிகாரி: 2023 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக இருந்தது. தற்போது மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இது போன்ற சம்பவம் நடந்த போது, அங்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஆக மோகன்ராஜ் பணியமர்த்தப்பட்டார். இவர் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மேலும் குண்டர் தடுப்புச் சட்டம் மூலம் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இவரின் நடவடிக்கையால் கடுப்பான அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் இவரை மிரட்டியுள்ளதாகவும், தன் பொறுப்பில் இப்படி நடப்பது தன் பெயர்க்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதே நேரம் கள்ளச்சாராயத்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் எனவும் அவர் ஊகித்ததைத் தொடர்ந்து அவர் 8 மாதங்கள் பணி இருக்கும் நிலையில் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளார். அப்போதே இச்சம்பவம் பெரும் பேசும் பொருளாகவும் இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் இடையே கூறப்படுகிறது.