Thalapathy 69 Poojai: ‘தளபதி 69’ படத்தின் பூஜை.. தளபதி விஜய்யின் வைரல் புகைப்படங்கள்..!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
அக்டோபர் 04, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். வசூல் வேட்டை மன்னனாக திகழும் இந்த நிலையிலேயே, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அறிக்கை வெளியிட்டார்.அதில், ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்திருந்தார். எனவே விஜய்யின் இறுதிப்படமாக உள்ள தளபதி 69 (Thalapathy 69) குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். Rajinikanth Discharged From Hospital: "கண்ணா.. சும்மா அதிருதுல.." மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில், பாபி தியோல், பூஜா ஹேக்டே, மமிதா பைஜூ, கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி, நரேன் உள்ளிட்டோர் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்திற்காக, படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்று முடிந்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் குஷிமோடில் தற்போது உள்ளனர்.
தளபதி விஜய்யின் வைரல் புகைப்படங்கள்:
SET 4 ♥️
Neenga kekrathu elame onnu onna coming bruh 😁#Thalapathy69Poojai#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu… pic.twitter.com/6tBmm0gZY2
— KVN Productions (@KvnProductions) October 4, 2024
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

