Rajinikanth Discharged From Hospital: "கண்ணா.. சும்மா அதிருதுல.." மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அக்டோபர் 04, போயஸ் கார்டன் (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் இறுதியாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வரும் அக்.10 அன்று படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து, அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதற்காக அவ்வப்போது படப்பிடிப்பு தலங்களுக்கு சென்று, பின் மீண்டும் அவர் சென்னை திரும்பி வருகிறார்.
இதனிடையே, அக்டோபர் 1 அன்று போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு (Rajinikanth Health Condition) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, அப்பலோ (Chennai Apollo Hospital) மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!
தொடர்ந்து ரஜினியின் இதயத்திலிருந்து பிரிந்து செல்லும் பிரதான ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதனை கண்டறிந்து ஸ்டண்டு வைத்து சரி செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்த நிலையில் சுமார் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று அதிகாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். ரஜினிகாந்த் வீடு திரும்புகிறார் என்ற தகவல் பகலில் வெளிவந்தால் அதிக அளவில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் அதிகாலையிலேயே அவர் போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

