Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. ட்ரைலர் வெளியீடு எப்போது? விபரம் உள்ளே..!
பிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
ஜூன் 06, சென்னை (Andhra Pradesh News): இயக்குநர் ராஜமெளலி (SS Rajamouli) இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி’ (Baahubali). பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டியது. இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலும் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல உலக அளவில் அதிக வசூலை குவித்த படமும் ஆகும். இந்த படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியவர் தான் பிரபாஸ் (Prabhas). Man Dies Of Heart Attack: மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்.. திடீரென உயிரிழந்த சம்பவம்.. ஹைதராபாத்தில் பரபரப்பு..!
கல்கி: தற்போது ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களின் கவனமும் இந்தப் படத்தில் குவிந்துள்ளது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்திருப்பது ஒரு கவனத்தை ஈர்க்கக் கூடிய அம்சமாக இருந்து வருகிறது. மேலும் தீபிகா படுகோனே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. கல்கி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் இந்த மாதம் 27ம் தேதி ரிலீஸாகிறது. அதன்படி, கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) படத்தின் ட்ரைலர் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது.
(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

