Raayan OTT Release: ஓடிடியில் வெளியான ராயன்.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
தனுஷின் 50வது படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 23, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வெளியான வாத்தி படத்தில் நடித்த தனுஷுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வெற்றி, வசூல் சாதனை செய்தது. Parvathy Thiruvothu on Hema Committee Report: "இது வெறும் ஆரம்பம் தான்.." ஹேமா கமிட்டி குறித்து மலையாள நடிகை பார்வதி கருத்து..!
ராயன்: தனுஷின் 50வது படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன் படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தியது. தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதை, பெரிதாக இல்லை என்றாலும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. இந்தப் படமானது இன்று அமேசான் பிரைமில் (Prime Video) வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளியான ராயன்:
The R in Raayan stands for Revenge 😈 and it's best served cold 🔥#RaayanOnPrime, Watch Now: https://t.co/IhzmtJXqBD@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan pic.twitter.com/5GBQDsKB0x
— prime video IN (@PrimeVideoIN) August 23, 2024
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

