ஆகஸ்ட் 23, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் (Hema Committee) அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி: இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!
நடிகை பார்வதி கருத்து: இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தற்போது பார்வதி திருவோத்து (Parvathy Thiruvothu) கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, "மலையாள சினிமாத்துறை மோசமாக உள்ளது என்று மக்கள் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் நாங்கள் மிகவும் சரியாக உள்ளோம். அதனால்தான் எங்கள் பிரச்சனைகளை சரி செய்கின்றோம். மலையாள கமிட்டி அறிக்கை 2018 இல் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இவ்வளவு நாள் இந்த காலம் எடுக்கப்பட்டது கசப்பாக உள்ளது. இந்த அறிக்கைக்காக இவ்வளவு நாட்கள் நாங்கள் போராடி இருந்தோம். ஹேமா கமிட்டி அறிக்கை என்பது மலையாள சினிமா துறையில் நடந்த பல பாலியல் துன்புறுத்தல்களை பேசுகிறது. ஆனால் மக்கள் இதில் உள்ள சர்ச்சையான விஷயங்களை மட்டுமே பார்க்கின்றனர். உண்மையில் நமக்கு தேவையானது எது என்பதை பார்க்க வேண்டும். இந்த அறிக்கைக்காக நாங்கள் பல நாள்கள் உழைத்துள்ளோம். ஆனால் அறிக்கை வெளிவந்த பொழுது எங்களுடைய முழு நம்பிக்கையும் அவநம்பிக்கையாக ஆனதாக உணர்கின்றோம். சினிமா துறையில் இதுதான் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. இதனை அனைவரும் பின் தொடர வேண்டும் என்று நினைக்கின்றேன்." என்றார்.