Rajinikanth's 'Lal Salaam' Released: மிரட்டலாக வெளியான லால் சலாம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியானது.

Rajinikanth's 'Lal Salaam' Released: மிரட்டலாக வெளியான லால் சலாம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Lal Salaam (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 09, சென்னை (Chennai): ரஜினியின் மகள் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்து சினிமாவை கற்றுக்கொண்டவர். தனுஷை வைத்து 3 படத்தை எடுத்தார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்பின் அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இப்போது தனுஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும், பல வருடங்கள் கழித்து லால் சலாம் (Lal Salaam) என்கிற படத்தை இயக்கியிருகிறார்.

லால் சலாம்: இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், மகள் கேட்டுக்கொண்டதால் ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினி (Rajinikanth) நடித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் இடையில் இப்படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவியது. அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'லால் சலாம்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் வரும் இன்று உலகமெங்கும் வெளியானது. 3 Aged Girl Rape: 3 வயது பச்சிளம் சிறுமி வயல்வெளியில் பலாத்காரம்; குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

ரசிகர்கள் கொண்டாட்டம்: இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்களை வரவேற்க திரையரங்குகள் எல்லாம் மாசாக ரெடி ஆகியுள்ளது. அதிலும் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில், மிகப்பெரிய கட் அவுட் வைத்து, அது முழுதும் பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்துக்கு தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ இல்லையென்றாலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் லால் சலாம் திரைப்படம் வெளியாகிவிட்டது. அதே நேரம் எக்ஸ் தலத்தில், லால் சலாம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே வருகின்றன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜெயிலரை தொடர்ந்து லால் சலாமும் தரமான கம்பேக் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).