Thalaivar 171: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thalaivar 171: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்..!
Thalaivar 171 (Photo Credit: @sunpictures X)

மார்ச் 28, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். Baltimore Bridge: கேப்டன் கப்பல் விட்டு விளையாடிய பாலத்திற்கு... இப்படி ஒரு கதையா..!

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் அடுத்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்த அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் கையில் விலங்கு இருப்பது போல் ஸ்டைலிஷ் போஸ் உள்ளது. இதன் மூலம் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் வித்தியாசமாக ஏதோ சொல்ல வருகிறார் என்பது தெரிய வருகிறது.

(The above story first appeared on LatestLY on Mar 28, 2024 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).