Baltimore Bridge (Photo Credit: Pixabay)

மார்ச் 28, மேரிலேண்ட் (World News): அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ளது பல்டிமோர் நகரம். இங்கு பாயும் படாப்ஸ்கோ ஆற்றில் இருந்து 185 அடி உயரத்தில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott) மேம்பாலம் 1977ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க தேசிய கீதத்தை எழுதியவரான ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ நினைவாக இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மொத்த நீளம் சுமார் 8,600 அடி (2,600 மீட்டர்). இந்த பாலமானது இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கிறது. ஆதலால், அந்த பாலத்தில் எப்போதுமே வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். வருடத்திற்கு சுமார் 11 மில்லியன் வாகனங்கள் இதை கடக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர். இந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து (Bridge Collapse) ஏற்பட்டது. இதில், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. ஆற்று தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், கார்கள் அடித்து செல்லப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே அந்த ஆறு முழுவதும் கப்பல்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. WhatsApp New Feature: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 செகண்ட்ஸ் போதவில்லையா?.. இதோ உங்களுக்கான ஒரு அப்டேட்..!

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், டாலி சரக்கு கப்பலில் இரண்டு முறை விளக்குகள் முற்றிலுமாக அணைந்து பின் எரிந்துள்ளன.இதில் இருந்து கப்பலுக்கு வரும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் கப்பலின் கண்ட்ரோலை கேப்டன் இழந்திருக்கலாம் எனவும் காவல் துறை தங்களது விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளனர். பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.

எஃகு மற்றும் அலுமினியம் முதல் விவசாய உபகரணங்கள் வரையிலான பொருட்களுக்கான முக்கிய பிராந்திய மையமாக இந்த துறைமுகம் உள்ளது, மேலும் இது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பொருளாதார சிக்கல் ஏற்படும். மேலும் தற்போது பாலம் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்படக்கூடும். போக்குவரத்தை திசைதிருப்புவதற்காக மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டாலும், பயண நேரம் மற்றும் போக்குக்வரத்து நெரிசல் அதிகரிக்கும்.