Rakul Preet Singh Wedding: ரகுல் ப்ரீத் சிங்க்கு திருமணம்.. மாப்பிள்ளை பற்றி தெரியனுமா?.!
Rakul Preet Singh Wedding (Photo Credit: @fridayfanatics_ X)

ஜனவரி 03, சென்னை (Chennai): ரகுல் ப்ரீத் சிங் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான தடையற தாக்க என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு சில படங்கள் தமிழில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் மூலம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை. பின் தெலுங்கு பக்கம் சென்று மாஸ் நடிகையானார். மீண்டும் 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மூலம் தமிழில் கால் பதித்தார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்துள்ளார். Pongal Gift in Ration Shop 2024: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு... ரூ.1,000 ரொக்கம் கிடைக்குமா?.!

ரகுல் ப்ரீத் சிங் திருமணம்: இந்நிலையில் இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியைக் காதலித்து வருகிறார். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் காதலை சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி இருவரும் பிப்ரவரி 22-ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.