
ஜனவரி 03, சென்னை (Chennai): ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift in Ration Shop 2024) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளதாவது, "2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 238,92,72,741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2,19,57,402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. Earthquake Alert: இந்தியா, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்: விபரம் உள்ளே.!