
ஜனவரி 23, திருவனந்தபுரம் (Cinema News): கடந்த 29 ஆண்டுகளாக திரை துறையில் பயணித்து வரும் மூத்த நடிகர் தான் விநாயகன் (Vinayakan). இவர் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றவர். ஜெயிலர் படத்தில் இவரது வர்மன் கேரக்டர் அதிகம் பேசப்பட்டது. நடிப்பில் மன்னனாக இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாகவே சிக்கல்களில் சிக்கி, பெரிய "சர்ச்சை நாயகனாகவும்" அவர் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் இவர் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறையினர் இவரை கைது செய்தனர். சமீபத்தில் கோவாவில் வைத்து ஒரு டீக்கடை முன் குடிபோதையில் இவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. DD Next Level: சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி, அடுத்த படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்.!
குடிபோதையில் நிர்வாணமாக நின்ற ஜெயிலர் வில்லன்:
இதற்கிடையே நடிகர் விநாயகன் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு நிர்வாண போஸ் கொடுத்து ஆபாசமாகத் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சியை பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த யாரோ செல்போனில் எடுத்து சமூக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் இன்னும் காவல்துறையினரிடம் புகார் செய்யவில்லை. இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் விநாயகன். “ஒரு நடிகராகவும், தனி நபராகவும் என்னால் கையாள முடியாத பல பிரச்சினைகள் உள்ளன. எனது செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விநாயகன் வீடியோ:
Actor #Vinayakan shouting & abusing with his Neighbor 🤥
⚠️⚠️ pic.twitter.com/DN9aNTRo0R
— DJ 𝕏 (@urstrulyDJX) January 20, 2025