ஜனவரி 21, கோடம்பாக்கம் (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னாளில் வெள்ளித்திரையில் காமெடி நடிகர் கவுண்டமணியின் இடத்தை கைப்பற்றி, மக்களிடம் வரவேற்பு பெற்ற நடிகர் சந்தானம் (Actor Santhanam). தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில், சந்தானத்தின் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வந்தது. இதனால் சந்தானத்தின் காமெடி இருந்தால், வயிறு குலுங்க சிரித்து படம் பார்த்து வரலாம் என்ற எண்ணம் இருந்தது.
வரவேற்பை பெற்ற சந்தானம்:
சமீபகாலமாக நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து பல படங்களில் வெளியான நிலையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு (Dhilluku Dhuddu), அக்யுஸ்ட் நம்பர் 1, டிக்கிலோனா, சபாபதி உட்பட சில படங்களே மக்களின் கவனத்தை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷாலுடன் சந்தானம் நடித்த மதகஜராஜா திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, மீண்டும் சந்தானத்தின் காமெடிகள் வரவேற்பை அடைந்தது. Dil Raju: பிரபல தயாரிப்பாளர் "தில் ராஜு" வீட்டில் திடீர் ஐடி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..!
புதிய பேய் படம் அறிவிப்பு:
முன்னதாக நடிகர் ஆர்யா - சந்தானம் இணைந்து படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. படத்தின் முதற்பார்வை போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படம் டிடி ரிட்டன்ஸ் போல பேய் படமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா தயாரித்து வழங்குகிறார்:
டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) என பெயரிடப்பட்டுள்ள படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ஆர்யா, கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, கீதிகா, யாஷிகா ஆனந்த், மாறன் உட்பட பலரும் நடிக்கின்றனர். படத்தின் இயக்கத்தை எஸ். பிரேம் ஆனந்த் மேற்கொண்டுள்ளார். படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்புள், நிகாரிகா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படம் மே மாதம் 2025ல் திரைக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் முதற்பார்வை:
Double the Humour 😂
Double the Horror 😱
Here’s the First Look of my next #DDNextLevel - Devil's Double
A film by @iampremanand
Produced by @TSPoffl @NiharikaEnt
May Release! #DhillukuDhuddu@arya_offl @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar… pic.twitter.com/GAtJFsSOTB
— Santhanam () January 21, 2025