Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு... விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!

நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தோற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர்

Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு... விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!
Nayanthara (Photo Credit: @filmfare X)

மார்ச் 7, சென்னை (Chennai): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா (Nayanthara). பல ஹிட் படங்களை கொடுத்துவரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை (Vignesh Shivan) பல ஆண்டுகளாக காதலித்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார். Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!

பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன்தாரா. கணவர், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து (divorce) பெற்று பிரித்துவிட்டார்கள் என தகவல் பரவியது. இந்த விவாகரத்து சர்ச்சை பற்றி எரியும் நிலையில், அதில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என பதிவிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 07:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).