Shruti Haasan To Star In Indo-UK Movie: சர்வதேச படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. சமந்தாவின் வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி..!

சர்வதேச படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.

Shruti Haasan To Star In Indo-UK Movie: சர்வதேச படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. சமந்தாவின் வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி..!
Shruti Haasan replaces Samantha Ruth Prabhu (Photo Credit: @TheYBPost X)

ஜனவரி 24, சென்னை (Chennai): பாஃப்டா (BAFTA) விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜானின் சென்னை ஸ்டோரி சர்வதேச படத்தில் சமந்தா (Samantha) ஹீரோயினாக நடிப்பார் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சமந்தாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை (Shruti Haasan) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, ஜான் ரெனோ, சாம் வொர்திங்டன், கெவின் ஹார்ட் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு மேல் சிகிச்சை பெற வசதியாக சினிமாவில் இருந்து சமந்தா விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Uses Of Mango For Clear Skin: மாம்பழம் போல தளதளன்னு மின்னும் சருமத்தை பெற வேண்டுமா? மாம்பழ ஃபேஸ் பேக் எப்படி போடுவது?.!

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, "நான் சென்னை பொண்ணு. அப்படி இருக்கும்போது சென்னையின் தனித்துவத்தை காட்டும் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது. பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).