ஜனவரி 24, சென்னை (Chennai): மாம்பழத்தை வைத்து சருமத்தை மெருகேற்றலாம். மாம்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின், பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளதால், சருமத்தில் உள்ள அழுக்கு மற்று இறந்த செல்களை நீக்கி வறட்சியின்றி நீரேற்றத்துடன் வைக்கிறது. வைட்டமின் ஏமற்றும் சி சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து, ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது புற ஊதாக்கதிர்கள் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
மாம்பழத் துண்டுகளை சிறிது நறுக்கி தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து பசை போல கலந்து கொள்ள வேண்டும். இதை முகம் கைகளில் தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமுடையதாகவும் வைக்கும். சரும பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து, பொலிவுடன் வைக்கும். பால் பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம். Australia Halts Golden Visa: கோல்டன் விசா திட்டம் நிறுத்தம்.. ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு..!
மாம்பழத்தை கூழாக்கி அதை 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை, ஒரு ஸ்பூன் தயிர், 4 துளி எலுமிச்சை சாறு அல்லது அரை ஸ்பூன் தேன் இவைகளை ஒன்றாக பேக் போல கலந்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இது வெயிலில் கருப்படையும் சருத்தை நீக்கி இயற்கை நிறைத்தை அளிக்கிறது. பழுப்பு நிறமாக இருக்கும் சருமத்தை சரி செய்கிறது.
2 ஸ்பூன் மாம்பழக் கூழுடன், 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல மாற்றி, இதை முகத்தில் தடவி மெதுவாக 20 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, பொலிவடைய வைக்கிறது. தோசை மாவில் மாம்பழக்கூழை சேர்த்து ஸ்க்ரபாகவும் முகத்தில் போடலாம். Women's Premier League 2024: மகளிர் பிரீமியர் லீக் 2024... எங்கு? எப்போது? போட்டி அட்டவணை வெளியீடு..!
மாம்பழ சதையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி முகத்தில் தடவி, 15 - 20 நிமிடங்கள் களித்து முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இது முகத்தின் நிறத்தை கூட்டி பளபளப்பாக்கும்.
4 ஸ்பூன் மாம்பழக் கூழ், 3 ஸ்பூன் அரத்த ஓட்ஸ், 2 ஸ்பூன் பாதாம் பவுடர், 2 ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மேலும் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கும்.
எந்த ஃபேசியலிலும் ஒரு ஸ்பூன் மாம்பழம் சேர்த்துக் கொள்ளலாம் . மாம்பழத்தை அப்படியே எடுத்து முகம் முழுவதும் தடவலாம். 15 நிமிடத்திற்கு பிறகு கழுவலாம். முகப்பருக்கள் இருப்பின் இது சிறந்த தீர்வாக இருக்கிறது. இதை தினமும் செய்யலாம்.