SK21 titled Amaran: 'எஸ்கே21' படத்தின் டீசர் ரிலீஸ்.. அமரனாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 16, சென்னை (Chennai): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இப்படத்தினை எஸ் கே 21 (SK21) என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் வீடியோ வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அமரன் (Amaran) என டைட்டில் வைத்துள்ளனர். Fastest Indian to 500 wickets: 500ஆவது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்.. கும்ப்ளே ரெக்கார்ட் முறியடிப்பு!
எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

