பிப்ரவரி 16, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து (IND Vs ENG Test Series) கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நடைபெற்ற முடிந்த இரண்டு ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு புள்ளிகள் முன்னிலை பெற்று ஆட்டத்தை சமநிலையில் வைத்துள்ளன. Kavita Chaudhary Of Udaan Fame Dies: பிரபல சீரியல் நடிகை கவிதா சவுத்ரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி - டக்கெட் இருவரும் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்து வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அப்போது அட்டாக்கில் வந்த அஸ்வின், அவர் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே கிராலியை 15 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் (Ravichandran Ashwin) சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் ஜாம்பவான் கிரிக்கெட்டரான அனில் கும்ப்ளே 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.