Suriya 44 Update: "காதல்.. சிரிப்பு.. யுத்தம்" சூர்யா 44 படத்தின் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார்.

Suriya 44 Update:
Suriya 44 (Photo Credit: @Suriya_offl X)

செப்டம்பர் 06, சென்னை (Cinema News): ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் (Studio Greens), வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில், சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.

கங்குவா: படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் விரைவில் திரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. படம் வெளியீடுக்கு முன்பே ரூ.500 கோடி அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. Actor Darshan Case: "உனக்கு ரசிகனா இருந்ததுக்கு என்ன செய்ய முடியுமோ.. அத செஞ்சிட்ட" நடிகர் தா்ஷன் வழக்கில் வெளியான குற்றப்பத்திரிக்கை..!

சூர்யா 44: நடிகர் சூர்யா, கங்குவா படத்தை அடுத்து கமிட் ஆன படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார், இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை அனைவரும் ‘சூர்யா 44’ (Suriya 44) என்று அழைத்து வருகின்றனர். இதனை ஸ்டோன்பென்ஞ் நிறுவனம் மற்றும் 2 டி எண்டெர்டெயின்மண்ட் ஆகிய நிறுவனங்கள் த்யாரிக்கின்றன. சூர்யாவுடன் சேர்ந்து ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்ப் படவுலகில் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனைப் போற்றும் வகையில் சூர்யா 44 படத்தின் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா 44 படத்தின் போஸ்டர்:

(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).