செப்டம்பர் 06, பெங்களூரு (Karnataka News): கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா' திரைப்படம் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை (Murder Case In Bengaluru) செய்த வழக்கில் மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். Blue Sattai Maran: வந்துருச்சு மக்களே.. நீங்கள் எதிர்பார்த்த புளூசட்டை மாறனின் 'கோட்' பட விமர்சனம் இதோ.. கழுவி ஊத்தி சம்பவம்.!
பெங்களூருவின் காமல்ஷில்பாயாவில் உள்ள வாய்க்காலில் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் கடந்த ஜூன் 9-ம் தேதி கண்டறியப்பட்டது. அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக கொல்லபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர் நடிகர் தர்சனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் சொகுசு வசதி: இந்த வழக்கில் தர்ஷன் உடன் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர், பவுன்சர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே நடிகர் தர்ஷன் தூகுதீபா ஜெயில் வளாகத்தில் சொகுசாக திறந்தவெளியில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கையில் டீ கப் மற்றும் சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின. இந்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடிகர் தா்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். GOAT FDFS: தளபதியின் 'கோட்'க்கு உண்மையான பலியாட்டை கொண்டு வந்த கூல் சுரேஷ்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..!
குற்றப்பத்திரிக்கை: இந்த நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகா் தா்ஷனுக்கு எதிராக பெங்களூரு காவல் துறையினர் தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 991 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், "தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி (33) என்பவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். மேலும் தர்ஷனுக்கு திருமணமாகி குழந்தை இருப்பதால், அவரை விட்டு பிரிந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதேபோல அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் பவித்ரா கவுடா இதுகுறித்து தர்ஷனிடம் கூறியுள்ளார்.
தர்ஷன் தனது உதவியாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் ரேணுகா சுவாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்திவந்து, பெங்களூருவில் வாகனம்நிறுத்தும் இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். ஆன்லைனில் வாங்கிய மெக்கா் என்னும் எந்திரத்தை பயன்படுத்தி ரேணுகாசாமியின் பிறப்பு உறுப்பில் பலமுறை மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் ரேணுகாசாமியின் முதுகெலும்பு முறிந்து, உடலில் 39 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னா் வாயை உடைத்து தாக்கியதில் ரேணுகாசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்திற்கு மறுநாள் நடிகை பவித்ரா கவுடா எதுவும் நடக்காதது போல் பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார்" என்று குற்றபத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.