Thalapathy 69: "லாஸ்ட் டான்ஸ் ஆஃப் தளபதி" நடிகர் விஜய்யின் அடுத்த & இறுதி படம்.. தளபதி 69 படத்தின் அப்டேட்..!
தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 13, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Greatest of All Time) படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி கோட்: இந்தப் படத்தில் புதுமையாக டி ஏஜிங் லுக் தொழில்நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள். அதன்படி விஜய்யை ரொம்பவே இள வயதில் காண்பித்திருக்கிறார்கள். மேலும், சர்ப்ரைஸ் கேமியோக்களும் இப்படத்தில் உள்ளன. டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. MTV VMA Awards 2024: எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள்.. வெற்றியாளர்கள் யார்? யார்? விவரம் உள்ளே..!
தளபதி 69: இந்நிலையில் தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கேவிஎன் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் (KVN Productions) தெரிவித்துள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 (Thalapathy 69) படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது கண்டிப்பாக 200% விஜய்யின் படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
தளபதி 69 அப்டேட்:
5 mani-ku sandhippom nanba nanbi 🤝🏻
We are happy to announce that our first Tamil film is …………#KVN5update Today at 5 PM 🔥 pic.twitter.com/XU3UIO9TId
— KVN Productions (@KvnProductions) September 13, 2024
(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

