MTV VMA Awards 2024: எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள்.. வெற்றியாளர்கள் யார்? யார்? விவரம் உள்ளே..!
இந்த ஆண்டிற்கான எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.
செப்டம்பர் 12, நியூயார்க் (Cinema News): 2024 ஆம் ஆண்டிற்கான எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் (MTV VMA Awards) நியூயார்க்கில் உள்ள USB அரங்கில் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன, டெஃப் ஜாம் என்ற ராப் லேபிளின் 40வது ஆண்டு விழாவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவில் அதிகமாக 7 விருதுகளைப் பெற்று டெய்லர் ஸ்விப்ட் () கலக்கினார்.
வெற்றியாளர்கள்: இந்த ஆண்டின் சிறந்த கிளிப் விருதினை டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் போஸ்ட் மலோன் பெற்றனர். மேலும் இந்த ஆண்டின் சிறந்த கலைஞர் விருதினை டெய்லர் ஸ்விஃப்ட், சிறந்த பாடலுக்கான விருதினை சப்ரினா கார்பெண்டர், சிறந்த கலைஞர் விருதினை சேப்பல் ரோன், சிறந்த அம்சம் விருதினை டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் போஸ்ட் மலோன், சிறந்த பாப் விருதினை டெய்லர் ஸ்விஃப்ட், சிறந்த ஹிப் ஹாப் விருதினை எமினெம், சிறந்த K-POP விருதினை லிசா போன்றோர் பெற்றனர். Bigg Boss Tamil Season 8: "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ..!
சிறந்த பதிப்பு விருதினை டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் போஸ்ட் மலோன், சிறந்த நடனக் கலை விருதினை துவா லிபா, சிறந்த காட்சி விருதினை எமினெம், சிறந்த கலை இயக்கம் விருதினை மேகன் தி ஸ்டாலியன், சிறந்த வைரல் வீடியோ விருதினை மேகன் தி ஸ்டாலியன் மற்றும் யூகி சிபா, மிகச் சிறந்த VMAS செயல்திறன் விருதினை கேட்டி பெர்ரி போன்றோர் பெற்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

