The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.

The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!
The Greatest Of All Time (Photo Credit: @actorvijay X)

ஏப்ரல் 11, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பானது துபாயில் நடைபெற உள்ளது. Redmi Turbo 3 Launches In China: சோனி கேமராவுடன் அசத்தலாக வெளி வரும் மொபைல்.. ரெட்மி டர்போ 3 அறிமுகம்..!

இந்நிலையில் இன்றைய ரமலான் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய் கோட் (GOAT) படத்தின் அடுத்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 11, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).