Redmi Turbo 3 (Photo Credit: @yabhishekhd X)

ஏப்ரல் 11, சென்னை (Technolgy News): பல அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே, டால்பி விஷன் (Dolby Vision), 2160Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus Protection), சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார், ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொண்டு வருகிறது. இந்த ரெட்மி டர்போ 3 மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Father Ladislaus Chinnadurai Passed Away: "மாதா, பிதா, குரு, தெய்வம்" அப்துல்கலாமின் குரு அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை மறைவு..!

விலை: இந்த டர்போ மாடலில் 4 வேரியண்ட்கள் வருகின்றன. இந்த ரெட்மியின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,995ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,450 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,750ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹாரி பாட்டர் மாடலின் விலை ரூ.32,200 ஆகவும் இருக்கிறது.  தற்போது இந்த மொபைல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.