Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
Thangalaan Trailer (Photo Credit: YouTube)

ஜூலை 10, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பல்வேறு கெட்டப்களில் ஒருவர் நடித்துள்ளார் என்றார் அது கண்டிப்பாக சியான் விக்ரம் (Chiyaan Vikram) தான். இதன் காரணமாகவே இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக இவருக்கு வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன் 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்திருந்ததினால், அவரின் தனி வெற்றியாக பார்க்கப்படவில்லை.

தங்கலான்: தொடர்ந்து நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படமானது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Impact of inflation: அட சாம்பாருக்கு வந்த சோதனை.. இந்திய வீடுகளில் சாம்பார் வைக்கும் செலவு உயர்வு.. வெளியான ஆய்வு தகவல்..!

தங்கலான் டிரைலர்: இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தையொட்டி உருவாகியுள்ள தங்கலான் பட டிரைலரில் அடி, உதை, ரத்தம் என அட்டகாசமாக நடித்து இருக்கிறார் விக்ரம். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் திரையுலக வாழ்வில் இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).