ஜூலை 10, புதுடெல்லி (New Delhi): பணவீக்கம் தொடர்பாக கிரிஸில் சண்டை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) தற்போது ஒரு ஆய்வினை எடுத்துள்ளது. அந்த ஆய்வில் பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களை பற்றி கூறியுள்ளனர். தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்ததால் பெரும்பாலான நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களில் காய்கறிகள் வாங்குவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
இதன் காரணமாக காய்கறிகள் கொண்ட தயாரிக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகளை சமைப்பது இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காய்கறிகள் இல்லாத உணவுகளை வீட்டில் சமைப்பது அதிகரித்து வருவதாகவும், அதோடு பழங்களின் விலை அதிகரித்துள்ளதால் பண்டிகை காலங்களில் மட்டுமே பழங்களை வாங்குவதாகவும், மற்ற நாட்களில் வாழைப்பழங்களை மட்டுமே வாங்குவதாகவும் ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளன.