Kadhalikka Neramillai Third Single: "உன் கொலவெறி இனிமே வேண்டாம், என் முகவரி இனிமே நான்தான்.." காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு.!

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது.

Kadhalikka Neramillai Third Single:
Kadhalikka Neramillai (Photo Credit: YouTube)

ஜனவரி 06, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன், பிரதர் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து:

இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்கான எடுக்கப்பட்டு முடிவு என அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பிறந்த நாள் அன்று, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். National Crush Wamiqa Gabbi: இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ்.. யார் இந்த வாமிகா கபி?!

காதலிக்க நேரமில்லை:

தொடர்ந்து கடந்த மாதம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ (Kadhalikka Neramillai) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. இன்றைய தலைமுறையினரின் காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல் இரண்டு பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது பிரேக்கப் டா பாடல் வெளியாகியுள்ளது. ஸ்நேகன் இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடத் துவங்கி இருக்கிறார்கள்.

பிரேக்கப் டா பாடல்:

(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).