ஜனவரி 06, கோடம்பாக்கம் (Cinema News): கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை அந்த படத்துக்கு பிறகு ரசிகர்கள் நேஷனல் கிரஷ் எனக் கொண்டாடினர். கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். பின்னர் கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை அந்த படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயினான திரிப்தி திம்ரி பின்னுக்கு தள்ளி நேஷனல் கிரஷ் என கொண்டாடப்பட்டார். தொடர்ந்து லாபதா லேடீஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரதிபா ரண்டா நேஷனல் கிரஷ் என கொண்டாடப்பட்டார். Tamil Actor Vishal: 'மதகஜராஜா'வாக வராமல் வைரஸ் காய்ச்சலில் வந்த விஷால்.. வைரலாகும் வீடியோ.!
இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ்:
இந்த நிலையில் பேபி ஜான் படத்தில் நடித்த வாமிகா கபிக்கு (Wamiqa Gabbi) திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். 31 வயதாகும் வாமிகா கபி, இந்தி மற்றும் பஞ்சாபி மொழிப் படங்களில் வாமிகா அதிகம் நடித்து வருகின்றார். 2007ஆம் ஆண்டில் இருந்து அதாவது அவரது 14ஆம் வயதில் இருந்து சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் படங்களில் மையக் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்து அதற்கேற்ற படங்களை தேர்வு செய்து வருகின்றார். தமிழில் செல்வராகவன் கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் வாமிகா கபி நடித்துள்ளார். தற்போது வாமிகா கபிவை நேஷனல் கிரஷ்ஷாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிரடியாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.