Vidaa Muyarchi First Look Out: திருவினையாகிறது அஜித்தின் விடாமுயற்சி.. அவர் பாதையில் முன்னேறும் ஃபர்ஸ்ட் லுக்..!
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
ஜூலை 01, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. National Doctor’s Day 2024: "நம்மை காக்கும் நம் கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்.." தேசிய மருத்துவர்கள் தினம்..!
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் அஜித் கையில் ஒரு டிராவல் பேக் உடன் நடந்து வருகிறார். குறிப்பாக அஜித் இப்போஸ்டரில் ஸ்லிம்மாக செம ஸ்டைலாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the much-awaited first look of #VidaaMuyarchi 🤩 Brace yourselves for a gripping tale where perseverance meets grit. 🔥🎬#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/ABtDSoM46S
— Lyca Productions (@LycaProductions) June 30, 2024
(The above story first appeared on LatestLY on Jul 01, 2024 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

