ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) ஆண்டுதோறும் ஜூலை 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நம்மை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களின் சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த நாள் அங்கீகரிக்கப்படுகிறது. DK as RCB Coach & Mentor: பெங்களூர் அணியின் வழிகாட்டி, பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்; "ஈ சாலா கப் நம்தே" கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வரலாறு: புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில், ஒவ்வொரு வருடமும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.