Leo 2 Officially Confirmed: லியோ பார்ட் 2... மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்..!

தற்போது விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் கனகராஜே இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leo 2 Officially Confirmed: லியோ பார்ட் 2... மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்..!
Leo 2 (Photo Credit: @dp_karthik X)

டிசம்பர் 28, சென்னை (Chennai): இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. லியோ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதுவும் குறிப்பாக இரண்டாம் பாதியில் லியோ தாஸை காட்டும் இடத்தில் அப்படியே புஷ்பா படத்தின் வாடை பலமாக அடித்தது. லியோ தாஸின் கோட்டை என அந்த ஃபேக்டரியிலேயே படத்தை காட்டும் நிலையில், அவங்களுக்கெல்லாம் வீடு வாசல் எல்லாம் இருக்காதா? என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்பார்த்த படியே கடைசி கிளைமேக்ஸுக்கு என்று, ஸ்பெஷல் கேமியோ வைத்து முடித்தார் லோகேஷ். ஆனால், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் செய்த மேஜிக்கை அது செய்யாமல் வெறும் வாய்ஸாகவே மட்டும் வந்து போவது யாரையும் கவரவில்லை. முதல் பாகமே இவ்வளவு கோளாறாக இருக்கும் நிலையில், இப்படத்திற்கு இரண்டாம் பாகம் (Leo 2) வர உள்ளது. Korean Beauty Standards: இளம் பெண்களைக் கவரும்... தென் கொரிய ப்யூட்டி ஸ்டேண்டர்டு..!

மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்: தளபதி விஜய் தற்போது தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 69, 70 என இடையில் இரு திரைப்படங்கள் இருக்கும் நிலையில் விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் தான் இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் லியோ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதிலும் விஜய்யுடன் அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கிறார்களாம். கமல்ஹாசன் இந்த படத்திலும் கேமியோ செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).