டிசம்பர் 28, சென்னை (Chennai): இந்திய பெண்கள் இயற்கையிலேயே பெரிய கண்கள் அடர்த்தியான புருவம், அழகான முக மற்றும் உருவ அமைப்பைக் கொண்டவர்கள் தான், இருந்தாலும் இந்திய பெண்களுக்கு வெள்ளை நிறத்தோலின் மீது ஈர்ப்பு அதிகமாகவே உள்ளது. அதற்காக வொயிட்னிங், லைட்னிங் போன்ற டிரீட்மெண்டுகளை அதிக செலவாயினும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதிலும் தற்போதுள்ள இளம் பெண்கள் கொரிய ப்யூட்டி ஸ்டேண்டர்டை பின்பற்றுகின்றன. உலகில் தென் கொரியா தனித்துவமான அழகு மற்றும் ஆடை திறனைக் கொண்டுள்ளது. கொரியன் சீரியல் மற்றும் படங்களுக்கும், கே-பாப் கல்சருக்கும் உலகம் முழுவதும் அதிக பேன்ஸ்பேஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் கொரிய பெண்கள் தங்களை அழகாக காட்டுவதில் மிகுந்த கவனம் செலுத்துவர். மேலும் கொரியாவில் அழகு சார்ந்த பொருட்கள் அதிக அளவில் விற்றும் தீர்ந்து போகும். 2021 கொரோனா காலகட்டத்தில் கூட தென் கொரியாவின் அழகு சாதனப் பொருட்களின் சந்த மதிப்பு 15.71 பில்லியன் அமேரிக்க லாடராக இருந்துள்ளது. கொரியாவில் காஸ்மெட்டிக் டிரீட்மெண்டுகளும் பிரபலமான ஒன்றாகும். Remembering Vijayakanth: விஜயகாந்த் மறைவு... ரசிகர்கள் மொட்டையடித்து இரங்கல்!!
கொரிய ப்யூட்டி ஸ்டேண்டர்டு (Korean Beauty Standards): கொரியன் ப்யூட்டி ஸ்டேண்டர்டாக பார்க்கப்படுவது முட்டை வடிவிலான முகம், இரட்டை இமை கண்கள், நேரான புருவம், சிறிய உதடுகள், ஒல்லியான உடல் அமைப்பே ஆகும். மேலும் அவர்களின் மேக்கப் டெக்னிக் விதமும் சற்று இந்தியர்களின் அழகு கலையிலிருந்து மாறுபட்டு உள்ளது. மேலும் கொரியன்கள் வெளிர் வெள்ளை நிறம் உடையவர்கள். இந்திய பெண்களுக்கு கொரியன் ப்யூட்டி ஸ்டேண்டர்டை பிடிப்பதற்கு இது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் கே பாப், கே டிராமாக்களிலும் இவைகளை முன்னிருத்தியே காட்டப்படுகிறது.
கொரியன் கிளாஸ் ஸ்கின்: மாசு மருவற்ற முகம் மற்றும் பளபளப்பான தேகம், மற்றும் கண்ணாடி போன்று ஜொலிக்கும் சருமத்தையே அவர்கள் விரும்புகின்றனர். தென் கொரியர்களின் அழகு குறிப்புகளையும் நம் இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. உதாரணமாக தென் கொரியர்கள் அதிகம் அரிசியை அதிகம் அழகு குறிப்புகளில் பயன்படுத்துவர். இது அழகு குறிப்புகள் தான் பல புராடக்டுகளையும் இங்கு பிரபலமாகி வருகிறது. தென் கொரியர்கள் ஸ்ரெயிட் ஹேரையே அதிகம் விரும்புகின்றனர். இங்கு பலரும் கரெட்டின் டிரீட்மெண்டுகளை எடுத்து ஸ்ட்ரெயிட்டாக வைத்து வருகின்றனர். இது தலை முடிக்கு ஆபத்தாகாத வரை அழகு தான். Preparing Bedroom for Great Night Sleep: படுக்கையறையில் இதை செய்யுங்கள்... நல்ல தூக்கம் வரும்..!
கொரியன் ஃபேஷன்: உண்மையில் பெண்கள் தங்களை அழகாகவும் நல்ல ஃபெஷன் அறிவுடன் காட்டிக் கொள்வது அவர்களுக்கு நல்ல தன்னமிக்கையை அளிக்கும். தாழ்வு மனப்பான்மையை குறைக்கும் என பல ஆய்வுகளும் கூறுகின்றன. தென் கொரியாவில் ஆண்கள் பெண்கள் என அனைவருமே தங்களின் ஆடைகளை நல்ல அழகான ரிச்சான ஆடைகள் அணிவதையே விரும்புகின்றன. இதை பலரும் இங்கு பின்பற்றியும் வருகின்றன. தென் கொரியர்கள் அந்த தட்ப வெப்பத்தை தாங்கும் வகையில் துணிகளை தடிமனாகவும், குளிருக்கு ஏற்பவும் அணிவர். அது நமது காலநிலைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் அவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். தன்னமிக்கை அள்ளித் தரும் வகையில் ஆடைகள் அணிவது நல்லது தான்.
பேஷன் எப்போதும் புதிது புதிதாக மாறிக் கொண்டே தான் இருக்கும். தென் கொரிய பேஷன் அனைவரையும் ஈர்க்கக் காரணம், சிறிய சிறிய பொருட்களைக் கூட அழகாகவும் ராயலாகவும் காட்டுவது தான். தலையில் அணியும் கிள்ப் முதல் செருப்பு வரை அனைத்தும் மேட்ச் ஆகவும், நீட்டாகவும் இருப்பது தான். கொரியர்களை போன்று அழகிற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் அவர்களைப் போன்று சுய பாராமரிப்பையும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ளலாம்.