Thalapathy Vijay Political Entry: அரசியலில் குதிக்கும் விஜய்.. விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று அறிவிப்பு..!

விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay (Photo Credit: @Real_HTC17 @vijaypoovannan X)

பிப்ரவரி 02, சென்னை (Chennai): நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார்.

தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதுமட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அது போல் அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றார். மேலும் காசுக்காக ஓட்டு போடாதீர்கள் என்றும் காசுக்காக ஓட்டு போடக் கூடாது என உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் அந்த விழாவில் கேட்டுக் கொண்டார். TN Weather Report: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர்: இந்த நிலையில்தான் நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்றனர். அப்போதே அவர் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று பலர் கூறினர். தொடர்ந்து, நடிகர் விஜய் கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில்,  1 கோடி உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து கட்சி உறுப்பினர்கள்,  தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement