Rain (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 02, சென்னை (Chennai): தற்போது தமிழகத்தின் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. Japan Plane Crash: ஜப்பானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்... அலறிய பயணிகள்..!

நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் பிப்ரவரி  4 முதல் 7 வரை  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதுமட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.