Mayandi Kudumbathar 2: குடும்பங்கள் கொண்டாடும் மாயாண்டி குடும்பத்தார்... விரைவில் வெளியாகும் பாகம் 2..!

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகிறது.

Mayandi Kudumbathar 2: குடும்பங்கள் கொண்டாடும் மாயாண்டி குடும்பத்தார்... விரைவில் வெளியாகும் பாகம் 2..!
Mayandi Kudumbathar (Photo Credit: @Sivaprasanth5 X)

ஜனவரி 04, சென்னை (Chennai): குடும்ப பாசத்தையும் பங்காளி சண்டையையும் அழகாக விவரித்த படம் தான் மாயாண்டி குடும்பத்தார். இப்படமானது கடந்த 2009 ஆம் ஆண்டு ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தை பார்ப்போர் கண்களில் கண்டிப்பாக கண்ணீர் துளி விடும். அந்த அளவு நெஞ்சை பிழியும் குடும்ப கதையை நேர்த்தியாக சொன்ன படம் தான் இது. இப்படத்தின் இயக்குனர் 2013 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்தார்.  Ashtami Chapparam: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா... பக்தர்கள் சாமி தரிசனம்..!

மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2: இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாயாண்டி குடும்பத்தார் 2 (Mayandi Kudumbathar 2) படத்தினை கேபி ஜெகன் இயக்க உள்ளார். இவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில், மாயாண்டி கதாபாத்திரத்தின் மகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்தில் நடித்த அதே கதையின் மாந்தர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர் என்று அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 08:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).