ஜனவரி 04, மதுரை (Madurai): மதுரை சப்பர தேரை, வருடத்தில் இருமுறை மட்டுமே காண இயலும். ஒன்று சித்திரை திருவிழா; மற்றொன்று அஷ்டமி சப்பரம். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தேரைப் பார்க்க குவிந்தனர்.
பல நூறு வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் அஷ்டமி சப்பரமானது (Ashtami Chapparam), மிகப்பெரிய வரலாறு ஒன்றினை, தன்னுள் அடக்கி வைத்துள்ளது. இந்த வரலாறு சம்பவமானது, மதுரையில் நடந்த திருவிளையாடல்களில் ஒன்றாகும். TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
அஷ்டமி சப்பர விழா: சிவபெருமான் அனைத்து உயிர்களுக்கும் உணவினை அளிப்பதற்காக, பூமி வருகிறார். அவர் உண்மையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கிறாரா? என்பதைச் சோதிக்க நினைக்கிறார், பார்வதி. எனவே, ஒரு பாத்திரத்தில் எறும்பை அடைத்து வைத்துக் கொள்கிறார். சிவபெருமான் வந்தவுடன், பார்வதி அவரிடம் சென்று கேட்பார். "தாங்கள் ஒரு உயிருக்கு மட்டும், படியளக்கவில்லை" என்றுக் கூறி, பாத்திரத்தை திறப்பார். ஆனால், அந்த எறும்பின் அருகாமையில் ஒரு அரிசி இருக்கும். அதனைக் கண்டு அதிர்ந்த பார்வதி, சிவனிடம் மன்னிப்பு கேட்பாள். இந்நிகழ்வானது, மார்கழி தேய்பிறையிலுள்ள அஷ்டமியில் நடைபெற்றது. Beauty Tips: நிறமேற்றும் பீட்ரூட் மாஸ்க்... தினமும் இதனை செய்து பாருங்கள்..!
இதனை நினைவுக் கூறும் வகையில், அஷ்டமி சப்பரம் நடைபெறுகிறது. ரிஷப வாகன தேரில், சிவன் மற்றும் மீனாட்சி அம்மன் வருவார்கள். மற்றொரு சப்பரத்தில், மீனாட்சி அம்மன் மட்டும் இருப்பார். கோவிலில் நில அரிசிகளை, வீசிக்கொண்டே செல்வர். மக்கள், அதனை எடுத்துச் செல்வர். இவையனைத்தும், மதுரையின் மாசி மற்றும் சித்திரை வீதிகளிலேயே நடைபெறும்.