Vaa Vaathiyaar Teaser: "ஹலோ சொல்லுங்க மணிசார்…" வெளியான நலன் - கார்த்தி ஜோடியின் ‘வா வாத்தியார்’ டீசர்.!
நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் கலக்கலான டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நவம்பர் 13, சென்னை (Cinema News): மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய மிகச்சிறந்த படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ (Vaa Vaathiyaar) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் சத்யராஜ், கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!
வா வாத்தியார் டீசர்: படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் இன்று வா வாத்தியார் டீசர் ரிலீஸாகியிருக்கிறது. டீசரின் தொடக்கத்தில் காவல் துறை அதிகாரியாக வருகிறார் கார்த்தி. வசனமே இல்லாமல் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையுடன் தொடரும் இந்த டீசர் பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக கார்த்திக்கு படம் ஹிட் தான் என்று கூறி வருகின்றனர்.
வா வாத்தியார் டீசர்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)