Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!

பிக் பாஸ் ஸ்கூலில் நடந்த மாரல் கிளாஸில் கடுப்பான சத்யா கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.

Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!
Bigg Boss Tamil Season Promo (Photo Credit: @VijayTelevison X)

நவம்பர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் கலந்து கொண்டனர். இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆக அர்னவ் வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருந்தார். அடுத்த ஐந்தாவது வாரமான நேற்றைய நாளில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. காரணம் இந்த முறை 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது அதிக போட்டியாளர்கள் உருவாகி விட்டனர். Shaktimaan Teaser: 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சக்திமான்.. மீண்டும் ஒளிபரப்பு - வெளியான டீசர்.!

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

தற்போது பிக் பாஸ் வீட்டை ஸ்கூலாக மாற்றியதில் இருந்து சண்டையாக இருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியராக மாறி ஆசிரியர்கள், பிரின்சிபல் வர்ஷினிக்கு டஃப் டைம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவில் மாணவ, மாணவியரிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார் மாரல் டீச்சர் ஜாக்குலின். ஒரு லீடர்ஷிப் குவாலிட்டி ஒருத்தரிடம் இருக்கு என ஜாக் தொடர இது நாமினேஷன் ரிவ்யூ மாதிரி இருக்கேமா என க்ளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் ஸ்டூடண்ட் சத்யா சொன்னார். நான் எடுக்கிற கிளாஸை தான் நீங்க கவனிக்கணும் என ஜாக் கடுப்பாக, வேண்டாம் வேறு யாருக்காவது சொல்லிக் கொடுங்க என்றார் சத்யா. உங்களுக்கு வேண்டாம்னா நீங்க எழுந்து வெளியே போங்கணு ஜாக் சொல்ல இதுக்கு தான இம்புட்டு நேரம் உரண்டய கொடுத்தேன் என கிளம்பிவிட்டார் சத்யா.

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).