Trisha Signs Salman Khan’s Film: மீண்டும் பாலிவுட் என்ட்ரி தரும் திரிஷா... விஷ்ணு இயக்கத்தில் கானுடன் கைகோர்க்கும் நாயகி..!

Trisha Signs Salman Khan’s Film: மீண்டும் பாலிவுட் என்ட்ரி தரும் திரிஷா... விஷ்ணு இயக்கத்தில் கானுடன் கைகோர்க்கும் நாயகி..!
The Bull (Photo Credit: @filmyexplorer X)

டிசம்பர் 29, சென்னை (Chennai): தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் தான் திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் 2010 ஆம் ஆண்டு கால்பதித்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் செல்லாமல், மீண்டும் தமிழிலேயே பல படங்கள் நடித்த வந்தார். அதுவும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் அவரின் உச்சம் விண்ணை தொட்டுள்ளது. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். CISF Chief: இந்திய வரலாற்றிலேயே முதல்முறை... முக்கிய பதவியில் பெண்மணி..!

இந்நிலையில் 13 வருடத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட் சினிமாவில் களமிறங்குகிறார் திரிஷா. தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில், சல்மான் கான் "தி புல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் தற்போது த்ரிஷா நடிக்க உள்ளார். ஏற்கனவே விடாமுயற்சி, ராம், ஜடென்டிட்டி ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).