டிசம்பர் 29, புதுடெல்லி (New Delhi): மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக சிறந்த உளவுத்துறை அதிகாரியாக அறியப்படும் ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் பிரிவின் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதேநேரம், மத்திய தொழில்துறை பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நினா சிங், அப்பதவியை பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். Xiaomi Mi Car: சியோமியின் முதல் கார்.. 5 நிமிட சார்ஜில் 220 கிமீ...!
2013 முதல் 2018ம் ஆண்டு வரை சி.பி.ஐ. இணை இயக்குநராகப் பணியாற்றிய நினா சிங், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு, மற்றும் நடிகை ஜியா கான் தற்கொலை வழங்கு விசாரணைகளை தன் நேரடிப் பார்வையில் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற நினா சிங், ராஜஸ்தானில் காவல் துறையில் பல்வேறு பதவிகள் வகித்துள்ளார்.