ஜூலை 06, நீலாங்கரை (Chennai News): மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு 06:50 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் வேணுகோபால் தெரு பகுதியில் நடந்த இக்கொலை விவகாரத்தில், ஆற்காடு பகுதியை சேர்ந்த ரௌடி சுரேஷ் என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாக, சுரேஷின் சகோதரர் பாலு தலைமையிலான கும்பல் ஈடுபட்டது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது வரை 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை அதிரவைத்த கொலை:
முன்விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவத்தால், சென்னையின் உள்ள பல பகுதிகளில் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது. இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாயாவதியும் சென்னை வருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Newborn Dies as Doctor Cuts Genitals: பிரசவத்தின்போது குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்; பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து பலி.!
நடிகர் விஜயின் இரங்கலும், கண்டனமும்:
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்…
— TVK Vijay (@tvkvijayhq) July 6, 2024